
SA20: MI Cape Town restricted Paarl Royals by 143/7! (Image Source: Google)
ஐபிஎல் தொடரைப் போன்றே தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பில் அந்த நாட்டில் டி20 கிரிக்கெட் போட்டி முதல்முறையாக நடத்தப்படுகிறது. இத்தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 11ஆம் தேதி வரை நடக்கிறது.
அதன்படி இன்று நடைபெறும் முதல் போட்டியில் ரஷித் கான் தலைமையிலான எம் ஐ கேப்டவுன் அணி டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்திவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள எம் எஸ் கேப்டவுன் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது.
அதன்படி களமிறங்கிய ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் - விஹான் லூப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் லூப் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஜேசன் ராய் 13 ரன்களிலும், டேன் விலாஸ் 6 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.