ஜனவரி மாதம் தொடங்கும் எஸ்ஏ 20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் - கிரேம் ஸ்மித் அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவின் உள்ளூர் டி20 லீக் தொடரான எஸ்ஏ 20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த ஆண்டு ஜனவாரி 9ஆம் தேதி தொடங்கும் என இத்தொடரின் கமிஷனர் கிரேம் ஸ்மித் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் டி20 தொடர் போன்று தென் ஆப்பிரிக்காவிலும் டி20 தொடர் 'எஸ்ஏ20 லீக்' என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. அதில் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களே அணிகளை ஒப்பந்தம் செய்துள்ளனர். அதன்படி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், எம்ஐ கேப்டவுன், பார்ல் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன.
இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த முதலிரண்டு சீசன்களிலும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் இத்தொடரின் மூன்றாவது சீசனிற்கான அறிவிப்பை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது பிப்ரவரி 08ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Trending
இதுகுறித்து பேசிய எஸ்ஏ 20 லீக் தொடரின் லீக் கமிஷனர் கிரேம் ஸ்மித், “இரண்டு வெற்றிகரமான எஸ்ஏ20 லீக் சீசன்களைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்க கோடை காலத்தை சொந்தமாக்கிக் கொள்ள நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதன்படி நிரம்பிய மைதானங்களில் அல்லது உலகளாவிய ஒளிபரப்பு மூலம் உலக கிரிக்கெட்டின் சில பெரிய பெயர்களை அனைவரும் அனுபவிக்கும் வாய்ப்பை வழங்க இருக்கிறோம்.
இத்தொடருக்கான போட்டி அட்டவணைகள், வீரர்களின் ஏலம் மற்றும் அணிகளில் தக்கவைக்கபட்ட வீரர்கள் குறித்த அறிவிப்புகள் வரும் மாதங்களில் வெளியிடப்படும் மற்றும் திட்டமிடல் ஏற்கனவே முழுமையாக இயக்கத்தில் உள்ளது. வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மற்றொரு அற்புதமான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வை உயிர்ப்பிக்க நாங்கள் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now