
எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்த்து பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. க்கெபர்ஹாவிலுள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு வில் ஜேக்ஸ் - பிலிப் சால்ட் அதிரடியாக தொடங்கினர். இதில் பிலிப் சால்ட் 10 ரன்களுக்கும், வில் ஜேக்ஸ் 12 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய வீரர்கள் சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சீட்டுக்கட்டுபோல் சரிந்தது.
இதனால் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 13.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 52 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி தரப்பில் அபாரமாக பந்துவீச்சிய ஓட்னியல் பார்ட்மேன் 4 விக்கெட்டுகளையும், டேனியல் வோரால் 3 விக்கெட்டுக்ளையும், மார்கோ ஜான்சென் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.