
இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. விக்கெட் கீப்பிங்கில் அவர் மிகவும் சிறப்பாகச் செயல்படுவதை தாண்டி, டெஸ்ட் பேட்டிங்கில் அவர் ஒரு புது தாக்கத்தை உருவாக்கி இருக்கிறார். இன்று இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக பேட்டிங் செய்கிறது. ஆனால் சமீப காலத்தில் அதற்கு முன்மாதிரியாக இருந்தவர் ரிஷப் பந்த் தான். டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் அவர் அதிரடியாக அணுகிய விதத்தில் இந்தியா மிகப்பெரிய வெற்றிகளை பெற்றுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தகுதிக்கு பிப்ரவரி மாதத்தில் உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடும் டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானது ஆகும். ஆனால் நேற்று விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவரால் இந்த முக்கியமான டெஸ்ட் தொடரில் விளையாட முடியாது.
எனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான முக்கியத்துவம் வாய்ந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த் இடத்தில் யார் சரியாக வருவார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான சபா கரீம் சில முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.