ஐசிசி விருதுக்கு என்னை பொறுத்தவரை சூரியகுமார் யாதவ் தகுதியானவர் - சபா கரீம்
டி20 போட்டிகளுக்கு இன்னொரு கோணத்தை கொடுத்த சூரியகுமார் யாதவ் இந்த வருடத்தின் சிறந்த டி20 பிளேயராக நிச்சயம் தேர்வு செய்யப்படுவார் என கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் சபா கரீம்.
2022 ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த டி20 வீரர் விருத்துக்கான பரிந்துரையில் சூரியகுமார் யாதவ், சிக்கந்தர் ராசா, சாம் கர்ரன் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய நான்கு வீரர்கள் இடம் பெற்று இருக்கின்றனர். இந்த விருது யாருக்கு கிடைக்கும் என்ற பரபரப்பு நிலவி வருகிறது. பெரும்பாலும் இந்த விருது சூரியகுமார் யாதவ் தட்டிச்செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் இந்த ஆண்டு 32 டி20 போட்டிகளில் விளையாடி 1164 ரன்கள் அடித்து அதிக ரன்கள் அடித்தவர்களில் முதலிடத்தில் இருக்கிறார். இவரது சராசரி 46.56 ஆகும். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இவரது ஸ்ட்ரைக் ரேட் 188 ஆகும். 68 சிக்சர்கள் மற்றும் 14 பவுண்டரிகள் அடித்திருக்கிறார். இத்துடன் இரண்டு சதங்கள் மற்றும் 9 அரைசதங்கள் அடங்கும். ஐசிசி டி20 ரேங்கிங்கிலும் முதல் இடத்தில் இருக்கிறார். நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் மூன்றாவது அதிகபட்ச ரன்களை அடித்திருக்கிறார்.
Trending
இந்த பட்டியலில் இருக்கும் மற்ற வீரர்களையும் குறித்து எடை போட முடியாது. சாம் கரன் டி20 உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை பெற்றார். இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி வெல்வதற்கு மிக முக்கிய பங்காற்றினார். அத்துடன் 6.25 எக்கனாமி உடன் 13 விக்கெடுகளையும் உலக கோப்பையில் கைப்பற்றி இருக்கிறார். இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 25 விக்கெடுகளை கைப்பற்றி அசத்தியிருக்கிறார். 10 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது சிறப்பான பந்துவீச்சாக இருக்கிறது. இவரும் சூரியகுமார் யாதவிற்க்கு நல்ல போட்டியை கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் இந்த விருது கட்டாயம் சூரியகுமார் யாதவிற்கு தான் செல்லும். அவர்தான் இதற்கு தகுதியானவர் என சபா க்ரீம் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “சாம் கரன், சூரியகுமார் யாதவிற்க்கு கடுமையான போட்டியாக இருக்கிறார். டி20 உலக கோப்பையை வைத்து குழுவினர் முடிவு எடுத்தால் நிச்சயம் சாம் கர்ரன் வெற்றியாளராக இருப்பார். ஆனால் வருடம் முழுவதும் பார்த்தால் இந்த விருதை சூரியகுமார் யாதவ் பெறுவார். ஏனெனில் ஓட்டுமொத்த டி20 போட்டிகளையும் வேறு ஒரு கோணத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.
உலக கோப்பையை வென்றிருந்தால் சந்தேகத்திற்கு இடம் இன்றி அவருக்குத்தான் கிடைத்திருக்கும். துரதிஷ்டவசமாக அது நடக்கவில்லை. சாம் கரனை நாம் ஒதுக்கிவிட முடியாது. ஆனால் என்னை பொறுத்தவரை சூரியகுமார் யாதவ் தகுதியானவர். வருடம் முழுவதையும் கவனத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now