Advertisement
Advertisement
Advertisement

டி20 உலகக்கோப்பையை இந்த அணி தான் வெல்லும் - சபா கரீம் ஆருடம்!

டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி தான் வெல்லும் என்று இந்திய முன்னாள் வீரர் சபா கரிம் கருத்து கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 23, 2022 • 18:23 PM
Saba Karim Predicts This 'Formidable' Team To Win The Upcoming T20 World Cup 2022
Saba Karim Predicts This 'Formidable' Team To Win The Upcoming T20 World Cup 2022 (Image Source: Google)
Advertisement

டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், டி20 உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பை மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படுகின்றன. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து என மற்ற அணிகளும் செம வலுவாக இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும்.

Trending


ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விராட் கோலி, ராகுல், சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, பும்ரா, புவனேஷ்வர் குமார், அஸ்வின், அக்ஸர் படேல், சாஹல் என பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் சிறந்த வீரர்களை கொண்ட நல்ல வலுவான பேலன்ஸான அணியாக திகழ்கிறது.

ஆனால் டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பது, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் பலம். வார்னர், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், கம்மின்ஸ், ஸாம்பா, மிட்செல் ஸ்டார்க் என ஆஸ்திரேலிய அணியும் மிரட்டலான அணியாக உள்ளது.

ஆனாலும் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய சிறந்த அணிகளும் கடுமையாக டஃப் கொடுக்கும். எனவே இந்த டி20 உலக கோப்பை மிக சுவாரஸ்யமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் நிலையில், டி20 உலக கோப்பை குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் சபா கரிம்,“ஆஸ்திரேலிய அணி வலுவான அணியாக திகழ்கிறது. அவர்கள் கோப்பையை வெல்ல வாய்ப்பு அதிகம். டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில்  நடப்பதும், உலக கோப்பை மாதிரியான பெரிய தொடர்களை வெல்லும் உத்திகளை அறிந்துவைத்திருப்பதும் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறது.

ஆஸ்திரேலிய மைதாங்கள் மிகப்பெரியவை. அங்கு ஸ்கோர் செய்ய பவர் ஹிட்டர்கள் தேவை. ஆஸ்திரேலிய அணியில் டிம் டேவிட், க்ளென் மேக்ஸ்வெல் ஆகிய பவர் ஹிட்டர்கள் உள்ளனர். இந்திய சுற்றுப்பயணத்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகிய 2 பவர் ஹிட்டர்களும் இல்லை. அவர்களும் சேர்ந்தால் ஆஸ்திரேலிய அணி மேலும் வலுவடைந்துவிடும். மீண்டும் டி20 உலக கோப்பையை வெல்லுமளவிற்கு வலுவான அணியாக திகழ்கிறது ஆஸ்திரேலிய அணி” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement