Advertisement

ஆஃப்கானிஸ்தான் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கிய சச்சின் டெண்டுல்கர்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடவுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்களை நேரில் சந்தித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுகர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Advertisement
ஆஃப்கானிஸ்தான் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கிய சச்சின் டெண்டுல்கர்!
ஆஃப்கானிஸ்தான் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கிய சச்சின் டெண்டுல்கர்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 07, 2023 • 01:07 PM

ஆஃப்கானிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி 8 புள்ளிகளுடன், இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெறும் நோக்கில் உள்ளது. ஆனால், அந்த இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என்ற வலுவான இரண்டு அணிகளை சந்திக்க உள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
November 07, 2023 • 01:07 PM

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆட உள்ள நிலையில், ஆஃப்கானிஸ்தான் அணி அதற்கான திட்டமிடலில் இருந்த போது அந்த அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா, அதிரடியாக சச்சின் டெண்டுல்கரை அழைத்து வந்தார். ஆஃப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையே ஆன போட்டி மும்பையில் நடைபெறுவதால் இந்த சந்திப்பு எளிதாக அமைந்தது. 

Trending

அஜய் ஜடேஜா, சச்சினுடன் ஒரே அணியில் ஆடியவர், அவரின் நண்பர் என்பதாலும், ஆப்கானிஸ்தான் அணியின் மீது இருக்கும் அன்பாலும் சச்சின் ஆப்கானிஸ்தான் வீரர்களை சந்திக்க நேரில் சென்றார். இதில் ஒரு முக்கிய விஷயம் உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி தற்போது திறமையாக ஆடி வருகிறது. அணியில் அனைத்து வீரர்களும் வெற்றிக்காக தங்கள் பங்கை அளித்து ஆடுகின்றனர். ஆனால், ஆஸ்திரேலியா என்ற பலமான அணியை தங்களால் வீழ்த்த முடியும் என ஆப்கானிஸ்தான் வீரர்கள் மனதளவில் நம்ப வேண்டும். அதற்கு பெரிய ஊக்கம் வேண்டும்.

இந்த நிலையில் தான் கிரிக்கெட் உலகின் மாபெரும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை அழைத்து வந்தார் அஜய் ஜடேஜா. வீரர்களின் வலைப் பயிற்சிக்கு நடுவே நடந்த இந்த சந்திப்பில் சச்சின், சில ஆப்கானிஸ்தான் வீரர்களை தனியாக அழைத்து ஆலோசனைகளை வழங்கினார். பேட்டிங்கில் சில நுணுக்கங்களை பற்றி கூறினார். 

அவரது ஆலோசனைகள் மற்றும் ஊக்கம் அளிக்கும் வார்த்தைகள் நிச்சயம் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு பெரிய தன்னம்பிக்கையை அளித்து இருக்கும். அது மட்டுமின்றி, பயிற்சியாளர் ஜொனாதன் டிராட், அஜய் ஜடேஜா, சச்சின் டெண்டுல்கர் நீண்ட நேரம் உரையாடலில் ஈடுபட்டனர். நிச்சயம் அப்போது ஆஸ்திரேலியா அணியை வீழ்த்துவது குறித்து பேசப்பட்டு இருக்கும். 

சச்சின் டெண்டுல்கர் கூறிய சில ஆலோசனைகளை நிச்சயம் ஆப்கானிஸ்தான் அணி எடுத்துக் கொள்ளும் என நம்பலாம். ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்த முதல் கட்டமாக போட்டிக்கு முன்பே சச்சின் டெண்டுல்கரின் ஊக்கத்தையும், ஆலோசனைகளையும் பெற்றுள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement