சச்சினுக்கு அனைத்தும் தெரியும்; ஆனால் நான் எதையும் எதிர்பார்க்கவில்லை - வினோத் காம்பிளி!
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்பிளி வறுமையில் சிக்கி தவிப்பது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் வினோத் காம்ப்ளியும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்கள். இவர்கள் இருவருமே ஒன்றாக தங்களது கிரிக்கெட் பயிற்சியை தொடங்கி இந்திய அணிக்குள் நுழைந்து அசத்தினர்.
இருவரும் ஒன்றாக நுழைந்த போதும், சச்சின் டெண்டுல்கரை போன்று வினோத் காம்பிளியால் ஜொலிக்க முடியவில்லை. சச்சின் 100 சதங்களை அடித்த போது, வினோத் காம்பிளி 104 ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். எனினும் அதில் 4527 ரன்களை குவித்துள்ளார்.
Trending
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், உள்ளூர் அணிகளுக்கு பயிற்சியாளராக வினோத் காம்பிளிக்கு கொரோனா பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. கிரிக்கெட் போட்டிகள் எதுவுமே நடைபெறாமல் இருந்ததால், காம்ப்ளி கடும் நிதி நெருக்கடியில் சிக்கினார். அவர் வறுமையில் வாடி வருவதாக செய்திகளும் வெளியாகின.
இந்நிலையில் தனது நிலைமை குறித்து காம்பிளி பேசியுள்ளார். இதில், “பிசிசிஐ கொடுக்கும் ரூ.30,000 பென்சனை நம்பியுள்ள ஒரு ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரராவேன். பிசிசிஐ கொடுக்கும் அந்த தொகை தான் எனது ஒரே ஒரு வருமானம். எனது குடும்பத்தை காக்கும் பிசிசிஐ-க்கு நான் நன்றி கடன் பட்டுள்ளேன்.
இளைஞர்களுடன் பணியாற்றும் வேலைகள் ஏதாவது எனக்கு வேண்டும். மும்பை மாநில அணியில் அமோல் மஜும்தார் தற்போது தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். அங்கு கூடுதல் நபர் தேவையென்றால், என்னை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நாங்கள் இருவரும் நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளோம். எனவே நாங்கள் சேர்ந்து செயல்பட்டால், மும்பை அணிக்கு சிறப்பான ஒன்றாக அமையும்” எனக்கூறியுள்ளார்.
காம்பிளியின் நிலைமை சச்சினுக்கு தெரியாதா, அவர் உதவவில்லையா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த காம்பிளி, “சச்சினுக்கு அனைத்துமே தெரியும். ஆனால் நான் அவரிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. "டெண்டுல்கர் மிடில் செக்ஸ் குளோபல் அகெடமியில்", அவர் தான் எனக்கு பணி பெற்று கொடுத்தார். இதற்கு மேலும் அவரிடம் நான் எதிர்பார்க்கவில்லை. அவர் எனக்கு எப்போதுமே நல்ல தோழனாக இருந்தால் போதும்” எனக்கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now