Advertisement

ரசிகர்களுடன் கிரிக்கெட் விளையாடிய சச்சின் டெண்டுல்கர்; வைரலாகும் காணொளி!

ஜாம்மு - காஷ்மீரில் சுற்றுலா சென்றுள்ள முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
ரசிகர்களுடன் கிரிக்கெட் விளையாடிய சச்சின் டெண்டுல்கர்; வைரலாகும் காணொளி!
ரசிகர்களுடன் கிரிக்கெட் விளையாடிய சச்சின் டெண்டுல்கர்; வைரலாகும் காணொளி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 22, 2024 • 02:25 PM

இந்திய க்ரிக்கெட் ரசிகர்களால் ‘கிரிக்கெட்டின் கடவுள்’ என அழைக்கப்படுபவர் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த வீரர் எனும் வரலாற்று சதனையுடன், எண்ணிலடங்கா பல சாதனைகளையும் சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார். அதன்படி இந்திய அணிக்காக 1989ஆம் ஆண்டு அறிமுகமான இவர் 200 டெஸ்ட், 436 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன்பின் 2013ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வை அறிவித்தார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
February 22, 2024 • 02:25 PM

இந்நிலையில் சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்த ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளார். நேற்று முன்தினம் அவர் விமானத்தில் பயணித்த காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார். பூமியில் இருக்கும் சொர்க்கமான காஷ்மீரை நான் நெருங்கிக் கொண்டிருக்கிறேன் என்று சச்சின் தனது எக்ஸ் தள பதிவில் பகிர்ந்த காணொளியில் கூறியிருந்தார். மேலும் விமானத்தில் அவரை கண்ட ரசிகர்களுடம் “சச்சின்.. சச்சின்..” என கோஷங்களை எழுப்பினர். 

Trending

அதன்பின் காஷ்மீருக்கு சென்ற அவர் ஒரு பேட் தயாரிக்கு தொழிற்சாலையையும் நேரில் சென்று பார்வைவிட்டார். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் சாலையில் விளையாடி கொண்டிருந்தவர்களுடன் சச்சின் டெண்டுல்கரும் இணைந்து விளையாடிய காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அந்த காணொளியில் சச்சின் டெண்டுல்கர் பேட்டை தலைகீழாக பிடித்து விளையாடியது ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement