Advertisement
Advertisement
Advertisement

டான் பிராட்மேட்னின் அறிவுரை எனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியது - சச்சின் டெண்டுல்கர்!

22 வயதில் இருந்த என்னை அழைத்து டான் பிராட்மேன் கொடுத்த சில அறிவுரைகள், எனது கிரிக்கெட் வாழ்க்கையை புரட்டிப் போட்டது என உருக்கமாக பேசியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

Advertisement
Sachin Tendulkar reacts to 'massive statement' made towards him!a
Sachin Tendulkar reacts to 'massive statement' made towards him!a (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 27, 2023 • 08:49 PM

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் உலகில் வானுயர சாதனைகளை படைத்து பலருக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறார்கள். இவர் விளையாடிய கிரிக்கெட்டை பார்த்து பல இளம் வீரர்கள் கிரிக்கெட்டை தொழில் முறையாக எடுத்துக் கொண்டு தற்போது விளையாடி வருகின்றனர் என்றால் அது சற்றும் மிகையாகாது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 27, 2023 • 08:49 PM

இன்றளவும் பலருக்கு முன்னுதாரணமாக இருந்து வரும் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய இளமைகால கிரிக்கெட் குறித்தும், கிடைத்த சில அறிவுரைகள் மற்றும் அவை தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு எந்த அளவிற்கு உதவியது என்பது பற்றியும் தனது பேசியுள்ளார். அதில் டான் பிராட்மன் தன்னை அழைத்து கூறிய சில அறிவுரைகள், என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை புரட்டிப்போட்டது என்றும் சச்சின் டெண்டுல்கர் பேசியது பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது.

Trending

1990களில் சச்சின் டெண்டுல்கரை பற்றி டான் பிராட்மன் பேசியபோது, “அவர் விளையாடியதை நான் தொலைக்காட்சி மூலம் பார்த்தேன். அவரது பேட்டிங் அணுகுமுறை நேர்த்தியாக இருக்கிறது. ஓய்வு பெற்ற பிறகு நான் என்னுடைய ஆட்டங்களை பார்த்ததில்லை. ஆனால் சச்சின் டெண்டுல்கரை பார்க்கையில் என்னுடைய ஆட்டம் போலவே இருந்தது. எனது மனைவியை அழைத்து பார்க்கச் சொன்னேன். ஆம் உங்களைப் போலவே ஆடுகிறார் என்று கூறினார். சச்சின் டெண்டுல்கரின் டெக்னிக் மற்றும் அணுகுமுறை மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. பார்த்துக் கொண்டே இருக்கலாம்.” என டான் பிராட்மன் கூறினார்.

கிட்டத்தட்ட 26 வருடங்களுக்கு பிறகு, தற்போது டான் பிராட்மன் குறித்த சில நினைவுகளை பகிர்ந்து கொண்டார் சச்சின் டெண்டுல்கர். “22-23 வயதில் இருக்கும் இளம் வீரருக்கு அப்படி சில வார்த்தைகள் கிடைத்தால் அது தங்கத்திற்கு சமம். எனக்கும் அவருக்கும் இருக்கும் ஒற்றுமைகளை நான் பேசுவது சரியாக இருக்காது. ஆகையால் இருவரும் ஒரே மாதிரியாக விளையாடுகிறோமா? என்று அவரது குடும்பத்தினரை முடிவு செய்யட்டும். அவர்களிடம் விட்டுவிடுகிறேன்.

அப்பேர்ப்பட்ட வீரர் என்னைப் பற்றி சொன்னார் என கேட்டபோது, மகிழ்ச்சியாகவும்! இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்றும் தோன்றியது. ஒரு வீரருக்கு அதுதான் டானிக். தன்னுடைய ஆட்டத்தை பார்க்கிறார்கள், அதனை பாராட்டுகிறார்கள் என்பதை தவிர வேறென்ன வேண்டும். பல வருடங்கள் என்னை தொடர்ந்து உழைக்க வைத்ததற்கு அவர் கொடுத்த சில வார்த்தைகள் மற்றும் அறிவுரைகள் மிகவும் உதவியது” என தெரிவிதுள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement