
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரை ரசிகர்கள் விரும்பியது போன்றே பிரமாதமாக துவங்கியுள்ளது.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய அந்த அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் மட்டுமே குவித்தது.
பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்தில் தடுமாறினாலும் பின்னர் விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 41.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 201 ரன்கள் குறித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.