
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான், உள்ளூர் மற்றும் உலக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனை அவது தனது சமூக வலைதளத்தில் காணொளி பதிவு மூலம் அவர் தெரிவித்தார். கடைசியாக அவர் கடந்த 2022ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ஷிகர் தவான் அதன்பின் போதிய வாய்ப்பு கிடைக்காமல் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.
கடந்த 2010 முதல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய ஷிகர் தவான் இதுநாள் வரை 34 டெஸ்ட், 68 டி20 மற்றும் 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 10,867 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இதில் 24 சதங்களும், 55 அரைசதங்களும் அடங்கும். இதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் இதுநாள் வரை 222 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2 சதம், 51 அரைசதங்கள் என 6,769 ரன்களை குவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ஷிகர் தவானுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்து செய்திகள் குவிந்து வருகின்றன. அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் தனது வாழ்த்து செய்தியினை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், “எங்களின் அட்டகாசமான ஷிகர் தவானை கிரிக்கெட் மைதானம் நிச்சயம் இழக்கும்.