Advertisement

யுவராஜ் சிங் அணியை வீழ்த்தி சச்சின் டெண்டுல்கர் அணி வெற்றி!

சிறப்பு கண்காட்சி டி20 போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான அணி வெற்றிபெற்றது.

Advertisement
யுவராஜ் சிங் அணியை வீழ்த்தி சச்சின் டெண்டுல்கர் அணி வெற்றி!
யுவராஜ் சிங் அணியை வீழ்த்தி சச்சின் டெண்டுல்கர் அணி வெற்றி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 18, 2024 • 04:21 PM

ஒரு உலகம் ஒரு கோப்பை என்ற பெயரில் ஓய்வு பெற்ற முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் விளையாடிய சிறப்பு கண்காட்சி டி20 போட்டி இன்று நடைபெற்றது. கர்நாடகாவின் கிராம பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி மற்றும் பல ஆயிரம் பேருக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கு நிதி திரட்டும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இப்போட்டி நடைபெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 18, 2024 • 04:21 PM

அதில் இந்திய ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரது தலைமையில் நிறைய ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடியது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கர்நாடகாவின் இருக்கும் சாய் கிருஷ்ணா கிரிக்கெட் மைதானத்தில் காலை 11 மணிக்கு தொடங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஒரு உலகம் அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

Trending

அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஒரு குடும்பம் அணிக்கு இலங்கை வீரர் கழுவிர்த்தனா அதிரடியாக 22 ரன்களைச் சேர்த்து அவுட்டாக அடுத்ததாக வந்த இந்திய வீரர் முகமது கைப் 9 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய டேரன் மேடி 8 பவுண்டரியுடன் 51 ரன்கள் எடுத்து சவாலை கொடுத்த போது சச்சின் டெண்டுல்கர் சுழலில் அவுட்டானார்.

இறுதியில் யூசுப் தான் அதிரடியாக 38 ரன்களும், கேப்டன் யுவராஜ் சிங் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 23 ரன்களும் எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஒரு குடும்பம் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது.ஒரு உலகம் சார்பில் ஹர்பஜன் சிங் 2, ஆர்பி சிங், அசோக் டின்டா, மாண்டி பனேசர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து 181 ரன்களை துரத்திய ஒரு உலகம் அணிக்கு நமன் ஓஜா 25 ரன்களில் வாஸ் வேகத்தில் அவுட்டாக, சச்சின் டெண்டுல்கர் அதிரடியாக 27 ரன்கள் எடுத்த போது முத்தையா முரளிதரன் சுழலில் அவுட்டானார். இருப்பினும் 3ஆவது இடத்தில் வந்து அதிரடி காட்டிய அல்வீரோ பீட்டர்சன் வேகமாக ரன்களை சேர்த்த நிலையில் எதிர்புறம் உபுல் தரங்கா 29, சுப்பிரமணியம் பத்ரிநாத் 4, ஹர்பஜன் 4 ரன்களில் அவுட்டானார்கள்.

மறுபுறம் தொடர்ந்து அசத்திய அல்விரோ பீட்டர்சனும் 74  ரன்கள் குவித்து கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்து அவுட்டானார். இறுதியில் கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது தன்னுடைய சகோதரர் யூசுப் பதான் வீசிய பந்தில் சிக்ஸர் அடித்த இர்பான் பத்தான் 12 ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார். இதன்மூலம் சச்சின் தலைமையிலான அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் யுவராஜ் தலைமையிலான அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement