
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பங்கேற்று விளையாடிய ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்து சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இந்த தோல்வி இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு இந்திய அணியின் வீரர்கள் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டியின் போது விராட் கோலி, கே.எல் ராகுல் ஆகியோர் அரைசதம் கடந்தாலும் பின் வரிசையில் அதிரடியாக விளையாட வேண்டிய சூர்யகுமார் யாதவ் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்ததாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “சூர்யகுமார் யாதவ் என்ன முயற்சி செய்தார்? என்பது எனக்கு புரியவில்லை. பின்வரிசை வீரர்களோடு விளையாடும் போது அவர்தான் ஸ்ட்ரைக் செய்து விளையாடி இருக்க வேண்டும். ஆனால் அவர் தவறான ஷாட்டுகளை விளையாடியது மட்டுமின்றி கடைசி கட்டத்தில் சிங்கிள்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார்.