
Sam Curran lands in UAE but all set to miss opening tie vs Mumbai Indians (Image Source: Google)
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட் ஆட்டம் ரத்தான நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, சத்தேஷ்வர் புஜாரா மற்றும் மொயீன் அலி ஆகியோர் கடந்த சனிக்கிழமை துபாய் வந்தனர்.
ஆனால் இந்தியா டெஸ்ட் தொடரில் விளையாடிய சிஎஸ்கே ஆல்ரவுண்டர் சாம் கரன் அவர்களுடன் வரவில்லை.
இதனால், சாம் கரன் வருகைக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில், அவர் புதன்கிழமை ஐக்கிய அரபு அமீரகம் வந்துள்ளார். அவரது வருகையை சிஎஸ்கே அணி நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.