மைதானம் மெதுவாக இருந்ததால் அதற்கு ஏற்றதுபோல் பந்துவீசினேன் - சந்தீப் சர்மா!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சந்தீப் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது திலக் வர்மா, நெஹால் வதேரா ஆகியோரது சிறப்பான பேட்டிங்கின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களைச் சேர்த்த்து. இதில் அதிகபட்சமாக திலக் வர்மா 65 ரன்களையும், நேஹால் வதெரா 49 ரன்களையும் சேர்த்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இதில் பட்லர் 35 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சனும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார்.
Trending
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 9 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 104 ரன்களையும், கேப்டன் சஞ்சு சாம்சன் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 38 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், புள்ளிப்பட்டியலில் தங்களது முதல் இடத்தையும் தக்கவைத்துக்கொண்டது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக சந்தீப் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
ஆட்டநாகன் விருதுபெற்ற பின் பேசிய சந்தீப் சர்மா, “நான் காயத்திலிருந்து சமீபத்தில் தான் குணமடைந்தேன். நான் முழு உடற்தகுதியை எட்டிய பின் விளையாடிய முதல் போட்டியிலேயே சிறப்பாக செயல்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இப்போட்டிக்கான ஆடுகளம் மெதுவாக இருந்ததன் காரணமாக நான் தொடர்ந்து பல வேரியேஷன்களிலு. கட்டர் பந்துகளை வீசுவதையுமே எனது திட்டமாக வைத்திருந்தேன். அதிலும் கடைசிக்கட்ட ஓவர்களில் நீங்கள் பந்து வீசுகிறீர்கள் என்றால் உங்களுக்கு பெரிய மனம் வேண்டும்.
ஐபிஎல் தொடரில் பல வீரர்கள் அந்த நேரத்தில் அழுத்தத்தை சந்திப்பதை நான் பார்த்துள்ளேன். எனவே அங்கே அசத்துவதற்கு நீங்கள் பெரிய மனதுடன் உங்களுடைய திட்டங்களை சரியாக செயல்படுத்த வேண்டும். கடந்த சில வருடங்களுக்கு என்னை யாரும் ஐபிஎல் ஏலத்தில் எடுப்பதற்கு முன்வரவில்லை. அதன்பின் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்ட நான் இப்போது ஃபிளேயிங் லெவனில் விளையாடி வருகிறேன். எனவே ஒவ்வொரு போட்டியையும் போனஸ் போல மகிழ்ச்சியுடன் எதிர்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now