ஐபிஎல் 2023: பும்ராவுக்கு மாற்றாக தமிழ்நாடு வீரர் அறிவிப்பு!
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பும்ரா காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு மாற்றாக தமிழ்நாடு கிரிக்கெட் அணி வீரர் சந்தீர் சர்மா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. உலகின் பல நட்சத்திர வீரர்கள் இத்தொடரில் விளையாடுவதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் பல நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளதும் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
அதிலும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா விலகியது அந்த அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. கடந்த செப்டம்பர் மாதத்தில் காயமடைந்த பும்ரா, இதுநாள் வரை களம் திரும்பாமல் இருக்கிறார். இதுமட்டுமல்லாமல் ரிச்சர்ட்சன்- ம் காயத்தால் வெளியேற, மும்பை அணி வேறு வழியில்லாமல் ஆர்ச்சர் மற்றும் பெஹ்ரன்டார்ஃப் மட்டுமே இருக்கிறார்கள். இதில் ஒருவர் காயமடைந்தாலும், மும்பை அணி பாடு திண்டாட்டம் தான்.
Trending
இந்த நிலையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் சர்மா, பும்ராவுக்கான மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்தார். பும்ராவுக்கு இணையான இந்திய வீரர் யாரும் இல்லாததால், உள்ளூர் வீரர்களையே தேர்வு நிலைக்கு மும்பை அணி நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் பும்ராவுக்கான மாற்று வீரராக தமிழ்நாடு அணிக்காக விளையாடும் சந்தீப் வாரியர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வலது கை வேகப்பந்துவீச்சாளரான சந்தீப் வாரியர், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்காக விளையாடியுள்ளார். இதுவரை 5 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அதேபோல் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி உள்ளதால், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அணி வீரர் சந்தீப் வாரியர் மும்பை அணியில் இணைந்துள்ளதால், சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதமாகலாம் என்று பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now