
sanjana-ganesan-took-interview-of-jasprit-bumrah-ask-question-on-his-shirtless-picture (Image Source: Google)
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு முழு உலகமும் காத்திருக்கிறது. இப்போட்டி நாளை (ஜூன் 18) முதல் சவுத்தாம்ப்டனில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் அவரது மனைவி சஞ்சனா கணேசன் ஆகியோரின் நேர்காணல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நேர்காணலை ஐ.சி.சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இந்த நேர்காணலில், சஞ்சனா கணேசன் தனது கணவர் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு புகைப்படங்கள் மூலம் அவரது வாழ்க்கையின் நினைவுகளை கூறுகிறார். மேலும் இந்த நேர்காணலில் இருவரும் வேடிக்கையாக தங்களது அனுபவங்களை பரிமாறிக்கொள்வது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.