
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து வருகிறார். இருப்பினும் கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பின் இந்திய அணி விளையாடிய டி20 போட்டிகளில் அவர் இடம் பெறவில்லை. இது குறித்து விராட் கோலி மற்றும் பிசிசிஐ இதுவரை எதுவும் கூறவில்லை என்றாலும் அவர் இனிவரும் டி20 போட்டிகளுக்கான அணியில் இடம் பெறமாட்டார் என்ற கருத்துகள் நிலவுகின்றன.
இந்நிலையில் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறத் தகுதியானவர் என்பதில் 100 சதவீதம் உறுதியாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.
கோலி குறித்து பேசிய சஞ்சய் பங்கர், “உலகக் கோப்பை போன்று பெரிய தொடர்களில் கடினமான சூழ்நிலைகளில் ஒரு சிறிய தவறு கூட பெரிய தோல்வியை கொடுக்கும். அது போன்ற சூழ்நிலைகளை சமாளிக்க உங்களுக்கு திறமையான வீரர்கள் தேவை. அது போன்ற சமயங்களில் உங்களுடைய ஸ்டிரைக் ரேட் மற்றும் ஐபிஎல் தொடரில் என்ன செய்தீர்கள்? என்பது முக்கியமல்ல.