கருண் நாயர் மூன்றாவது இடத்தில் விளையாடக் கூடியவர் அல்ல - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சனை மூன்றாவது இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

ENG vs IND Test Series: இங்கிலாந்து அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி நாளை (ஜூலை 10) லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் இருப்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளான. மேலும் இப்போட்டிகான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஜோஷ் டங்கிற்கு பதிலாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இடம்பிடித்துள்ளார். இதன்மூலம் கடந்த 2021ஆம் ஆண்டிற்கு பிறகு ஜோஃப்ரா ஆர்ச்சர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்கவுள்ளார். அதேசமயம் இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், அணி தேர்வு குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக கருண் நாயர், பிரஷித் கிருஷ்ணா ஆகியோரது இடங்கள் குறித்த விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.
இதில் பிரஷித் கிருஷ்ணா இடத்தில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவது உறுதியாகியுள்ளது. அதேசமயம் கருண் நாயருக்கு இந்த போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஏனெனில் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் விளையாடிய அவர் ரன்களைச் சேர்க்க தவறி இருந்தார். இதனால் அவரது இடத்தில் சய் சுதர்ஷன் அல்லது அபிமன்யூ ஈஸ்வரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய அணி குறித்து பேசிய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், “கடந்த ஆட்டத்தில் சில சுவாரஸ்யமான தேர்வுகள் இருந்தன, அவற்றை நான் ஏற்கவில்லை. இறுதியில், ஒரு வெற்றி அந்த முடிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். சாய் சுதர்சன் ஒரு இளம் வீரர் என்பதால், ஒரு ஆட்டத்திற்குப் பிறகு அவர் நீக்கப்பட மாட்டார் என்று நினைத்தேன், எதிர்காலத்திற்காக நாங்கள் அவரைப் பார்க்கிறோம். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் மிகவும் சிறப்பாக விளையாடினார்.
அதனால் அடுத்த போட்டியிலும் அவர் விளையாட வேண்டும் என விரும்பினேன், ஆனால் இந்த அணி நிர்வாகம் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்து, சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்திருந்தது. ஆனால் அந்த திட்டம் அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. அதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சனை மூன்றாவது இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என் பார்வையில், கருண் நாயர் மூன்றாவது இடத்தில் விளையாடக் கூடியவர் அல்ல.
எல்லோரும் பெரிய சதங்களை அடிக்கும் ஒரு தொடரில், ஒருவருக்கு ஒரு டெஸ்டில் மட்டுமே வழங்கி, பிறகு அவரை நீக்குவது நியாயமற்றது. சாய் இந்த வாய்ப்புக்கு தகுதியானவர் என்று நான் நினைக்கிறேன். கருண் நாயரின் தேர்வு மற்றும் அவரது கம்பேக் கதை காரணமாக அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதனால் நிதீஷ் ரெட்டி இடத்தில் கருண் மீண்டும் வாய்ப்பு பெறுவார் என்று நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Also Read: LIVE Cricket Score
இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.
Win Big, Make Your Cricket Tales Now