
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நத்தின. துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா 61 ரன்களையும், திலக் வர்மா 49 ரன்களையும், சஞ்சு சாம்சன் 39 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர்.
இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் மஹீஷ் தீக்ஷனா, துஷ்மந்தா சமீரா, வநிந்து ஹசரங்கா, தசுன் ஷனகா, சரித் அசலங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா மற்றும் குசால் பெரேரா இணை ஆபாரமாக விளையாடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இதில் சதம் விளாசி அசத்திய பதும் நிஷங்கா 107 ரன்களையும், குசால் பெரேரா 58 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். ஆனால் அதன்பின் களமிறங்கிய வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறியதன் காரணமாக, அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை எடுத்தது. இதனால் இந்த போட்டியானது டிராவனது. பின்னர் முடிவு எட்டுவதற்கு சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப் பட்டது.