
ஐபிஎலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு வரும் சஞ்சு சாம்சன், இந்திய அணிக்காக 2015ஆம் ஆண்டிலேயே அறிமுகமாகிவிட்டார். இருப்பினும், விக்கெட் கீப்பராக தோனி செயல்பட்டு வந்ததால், தினேஷ் கார்த்திக்கை போல சாம்சனுக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது.
தோனி ஓய்வு அறிவித்த சமயத்தில் விருத்திமான் சாஹா, ரிஷப் பந்த், கேஎல் ராகுல் போன்றவர்கள் சிறப்பாக செயல்பட்டதால், மீண்டும் சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், ஒருசில போட்டிகளில் மட்டுமே சாம்சன் விளையாடும் நிலை ஏற்பட்டது.
ஆம், இந்த 7 வருடங்களில் சாம்சன் 11 ஒருநாள், 16 டி20 போட்டிகளில்தான் விளையாடியிருக்கிறார். அந்த அளவுக்கு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்காமல் பிசிசிஐ தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான அணியில் நிச்சயம் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றுதான் கருதப்படுகிறது.