
கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற முடிந்து டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு, இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சனுக்கு ரெகுலராக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.இதன்மூலம், 2024ஆம் ஆண்டி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்சன் நிச்சயம் இடம்பெறுவார் எனக் கருதப்படுகிறது. இதற்கேற்றாற்போல், சாம்சனும் சிறப்பாக செயல்பட்டால்தான், இடத்தை உறுதிசெய்ய முடியும்.
இந்நிலையில், நேற்று நடைபெற்று முடிந்த இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சாம்சன் அபாரமாக விளையாடாமல் சொதப்பினார். அதிலும் நேற்று ஒருமுறை கேட்ச் வாய்ப்பை அவர் கொடுத்த நிலையில், அசலங்கா அதனை பிடிக்க தவறினார். இதனால், மறுவாய்ப்பு கிடைத்தும் அடுத்த இரண்டாவது பந்திலேயே சாம்சன் ஆட்டமிழந்ததுதான், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவர் இப்போதுமட்டுமல்ல, கடந்த சில வருடங்களாகவே ஸ்பின்னர்களுக்கு எதிராக திடுமாறி வருகிறார்.
இந்நிலையில், சாம்சன் இதனை செய்தால், அவரால் தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடியும் என சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சாம்சன் மிகச்சிறந்த வீரர். இருப்பினும், அவரது ஷாட் செலக்ஷன்தான் சிலமுறை தவறாக இருக்கிறது. தற்போதும் கூட, தவறான ஷாட்டை ஆடித்தான் ஆட்டமிழந்திருக்கிறார். ஆகையால், சாம்சன் ஷாட் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். இதனை அவரால் சுலபமாக செய்ய முடியும்.