Advertisement

தோனியிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன் - மிட்செல் சாண்ட்னர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளதாக மிட்செல் சாண்ட்னர் மனம் திறந்துள்ளார்.

Advertisement
Santner looks to channel Dhoni and Fleming in stern test of leadership skills
Santner looks to channel Dhoni and Fleming in stern test of leadership skills (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 26, 2023 • 10:17 PM

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை (ஜனவரி 27) தொடங்குகிறது. ஏற்கனவே, ஒரு நாள் தொடரை இழந்த நிலையில் நாளை இந்தியாவுடனான டி20 போட்டியில் களமிறங்குகிறது நியூசிலாந்து அணி. டி20 தொடருக்கு நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் சாண்ட்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 26, 2023 • 10:17 PM

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளதாக மிட்செல் சாண்ட்னர் மனம் திறந்துள்ளார்.

Trending

இது குறித்து பேசிய அவர், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் பயிற்சியாளர் ஃப்ளெமிங் இருவரும் அமைதியாக அணியினை வழிநடத்துபவர்கள். எப்போதும் அவர்கள் மிகவும் அமைதியாகவே இருப்பார்கள். அவர்களுக்கு கீழ் விளையாடியுள்ளது எனக்கு நிறைய அனுபவங்களைப் பெற்றுத் தந்துள்ளது” என்று தெரிவித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement