தியோதர் கோப்பை தொடரில் விளையாடும் சர்ஃப்ராஸ் கான்!
இந்திய அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் சர்ஃப்ராஸ் கான் தற்போது உள்ளூர் தொடரான தியோதர் கோப்பை தொடரில் விளையாடவுள்ளார்.
ரஞ்சிக் கோப்பை தொடர் போன்ற உள்நாட்டு தொடர்களில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி அசத்தி வரும் சர்ஃப்ரஸ் கானுக்கு, இந்திய டெஸ்ட் தொடரில் தொடர்ந்து வாய்ப்பு கிடைப்பதில்லை. சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது அதில் சர்ஃப்ராஸ் கானின் பெயர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ருதுராஜ் கெய்க்வாட், யாஷஸ்வி ஜெய்ஷ்வால் போன்றவர்கள்தான் அந்த அணியில் இடம்பிடித்தார்கள். சர்ஃப்ராஸ் கானின் பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில் சர்ஃப்ராஸ் கான் தற்போது துலீப் கோப்பை 2023 தொடரில் மேற்கு மண்டல அணிக்காக விளையாடி வருகிறார். இத்தொடர் முடிந்த உடனே தியோதர் கோப்பை 2023 தொடருக்கும் சர்ஃப்ராஸ் கான் தேர்வு செய்யபட்டுள்ளார்.
Trending
இது 50 ஓவர்கள் கொண்ட தொடராகும். சர்ஃப்ரஸ் கான் 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளிக்கும் தயாராகும் விதமாகத்தான், இத்தொடரில் விளையாட ஒப்புக்கொண்டுள்ளதாக கருதப்படுகிறது. இந்த தியோதர் கோப்பை 2023 தொடரில் சர்ஃப்ராஸ் கான் மேற்கு மண்டல அணிக்காக விளையாட உள்ளார். இந்த அணியில் ராகுல் திரிபாதி, ஷிவம் துபே ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
ராகுல் திரிபாதி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை சேர்க்கவில்லை. இதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள அயர்லாந்து தொடரில் அவர் விளையாட வாய்ப்புள்ளது எனக் கருதப்படுகிறது. அதேபோல், ஷிவம் துபே 2020ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணிக்காக விளையாடவில்லை.
ஐபிஎல் 2023 தொடரில் அபாரமாக செயல்பட்டதால்தான், அவருக்கு தியோதர் கோப்பை 2023 தொடரில் இடம் கிடைத்திருப்பதாக கருதப்படுகிறது. இத்தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now