இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்படும் சர்ஃப்ராஸ் கான்? காரணம் என்ன?
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து சர்ஃப்ராஸ் கான் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.
இப்போட்டியில் இந்திய அணியானது 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் வகித்து வருகிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் எதிவரும் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் நடைபெறவுளது.
Trending
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றாலோ அல்லது போட்டியை டிராவில் முடித்தாலும் கூட இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தும். அதேசமயம் வங்கதேச அணியானது தொடர் இழப்பை தடுப்பதற்காக கடுமையாக போராடும் என்பதல் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக தற்சமயம் இவ்விரு அணிகளும் தீவிரமான பயிற்சியிலும் ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய் அணியில் இருந்து இளம் வீரர் சர்ஃப்ராஸ் கான் விடுவிடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி எதிர்வரும் இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் மும்பை அணியில் சர்ஃப்ராஸ் கான் விளையாடவுள்ள காரணத்தால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் சர்ஃப்ராஸ் கான் இடம்பிடிக்காத நிலையில், இரண்டாவது போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என கூறப்படுகிறது.
இதனால் இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணியில் சர்ஃப்ராஸ் கான் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர், முஷீர் கான், ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்யான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அனைவரும் விளையாட உள்ளனர். அதேசமயம் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் தூபே ஆகியோர் இதில் பங்கேற்க மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய அணி: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பந்த், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் , ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.
Win Big, Make Your Cricket Tales Now