கிட் பேக்கில் மதுபானம் கொண்டு சென்ற வீரர்கள்; சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை!
சௌராஷ்டிரா அண்டர் 23 அணியைச் சேர்ந்த வீரர்கள் தங்களது கிட் பேக்குகளில் மதுபாட்டில்களை கொண்டு சென்று விமான நிலையத்தில் பிடிபட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தை புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தியாவின் உள்ளூர் தொடர்களில் ஒன்றான அண்டர் 23 வீரர்களுக்காக நடத்தப்படும் சிகே நாயுடு கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் ஜனவரி 7ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் சமீபத்தில் நடைபெற போட்டியில் சௌராஷ்டிரா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் சண்டிகர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதையடுத்து சௌராஷ்டிரா அணி வீரர்கள் சொந்த ஊர் திரும்ப விமானம் மூலம் புறப்பட சண்டிகர் விமானநிலையத்திற்கு வந்துள்ளனர்.
அப்போது அங்கு வீரர்களது உடமைகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையில் வீரர்களின் கிட் பேக்கில் மதுபானங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சௌராஷ்டிரா கிரிக்கெட் அணியையைச் சேர்ந்த ஐந்து வீரர்களின் கிட் பேக்கில் இருந்து 27 மதுபாட்டிகள் மற்றும் 2 பீர் பட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திடம் இதுகுறித்து புகாரளிக்கப்பட்டுள்ளது.
Trending
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், சண்டிகர் விமானநிலையத்தில் நடைபெற்றதாக கூறப்படும் இச்சம்பவம் எங்களது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வீரர்கள் கிட் பேக்கில் மதுபாட்டில்களை கொண்டு வந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது மற்றும் சகித்துகொள்ள முடியாத செயலாகும். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கள் ஒழுங்குமுறை நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் ஏற்கெனவே மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், கிரிக்கெட் வீரர்கள் தங்களது கிட் பேக்கில் மதுபாட்டிலை கொண்டு செல்ல முயற்சித்த சம்பவம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now