
SCO vs NED: Nederland's Won by 15 runs (Image Source: Google)
ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணி இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இதில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணியின் மேக்ஸ் ஓடவுட் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஓடவுட் 84 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தனர்.