Advertisement
Advertisement
Advertisement

SCO vs AUS: டி20 தொடருக்கான ஸ்காட்லாந்து அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ரிச்சி பெர்ரிங்டன் தலைமையிலான ஸ்காட்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
SCO vs AUS: டி20 தொடருக்கான ஸ்காட்லாந்து அணி அறிவிப்பு!
SCO vs AUS: டி20 தொடருக்கான ஸ்காட்லாந்து அணி அறிவிப்பு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 14, 2024 • 08:46 PM

நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. அதேசமயம் இத்தொடரில் கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியானது சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய நிலையிலும், அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டது.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 14, 2024 • 08:46 PM

மேற்கொண்டு இத்தொடருக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். இதனையடுத்து அவருக்கான மாற்று வீரர்களாக ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், மேத்யூ ஷார்ட் உள்ளிட்ட வீரார்கள் வரிசையில் உள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியானது வரும் செப்டம்பர் மாதம் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. 

Trending

அதன்படி ஸ்காட்லாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. இதில் ஸ்காட்லாந்து டி20 தொடரானது செப்டம்பர் 04ஆம் தேதியும், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் செப்டம்பர் 11ஆம் தேதி முதல் செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

இதனையடுத்து இத்தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் இளம் வீரர்களான ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், கூப்பர் கானொலி உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ரிசர்வ் வீரராக இடம்பிடித்திருந்தனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஸ்காட்லாந்து அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரிச்சி பெர்ரிங்டன் தலைமையிலான இந்திய அணியில் மேத்யூ கிராஸ், கிறிஸ் சோல், பிராண்டன் மெக்முல்லன், ஜார்ஜ் முன்சி, மேத்யூ கிராஸ், மைக்கேல் ஜோன்ஸ், மைக்கேல் லீஸ்க் மற்றும் மார்க் வாட் உள்ளிட்ட நட்சத்திர் வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

ஸ்காட்லாந்து அணி: ரிச்சி பெர்ரிங்டன் (கே), சார்லி கேசெல், மேத்யூ கிராஸ், பிராட்லி கியூரி, ஜாஸ்பர் டேவிட்சன், கிறிஸ் க்ரீவ்ஸ், ஆலி ஹேர்ஸ், ஜாக் ஜார்விஸ், மைக்கேல் ஜோன்ஸ், மைக்கேல் லீஸ்க், பிராண்டன் மெக்முல்லன், ஜார்ஜ் முன்ஸி, சஃப்யான் ஷெரீப், கிறிஸ் சோல், சார்லி டியர், மார்க் வாட், பிராட்லி வீல்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement