
ஐசிசி நடத்தும் ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் அடுத்த பதிப்பானது தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமிபியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் நேரடியாக தகுதிபெறாத அணிகளுக்கான லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஓமன் அணியில் தொடக்க வீரர் பிரதிக் அத்வாலே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய கேப்டன் அகில் இலியாஸ் ரன்கள் ஏதுமின்றியும், கரன் சோனவலே 3 ரன்களிலும், ஸீஸன் மக்சூத் 10 ரன்களிலும், அயான் கான், கலித் கைல் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும், சோயப் கான் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரதிக் அத்வாலே 34 ரன்களுக்கு என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களாலும் ரன்களைச் சேர்க்க முடியவில்லை. இதனால் ஓமன் அணி 21.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. காட்லாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அறிமுக வீரர் சார்லி கேசெல் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.