
சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கிய சாம் கொன்ஸ்டாஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், தலைப்பு செய்திகளிலும் இடம்பிடித்திருந்தார். இதனால் இனிவரும் காலங்களில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரராகவும் சாம் கொன்ஸ்டாஸ் உருவெடுப்பார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இநிந்லையில் கொன்ஸ்டாஸ் தற்போது ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ஷெஃபீல்ட் ஷீல்டில் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் விக்டோரியா அணிக்கு எதிரான போட்டியின் போது அவர் தனது வழக்கமான ரேம்ப் ஷாட்டின் மூலம் அவர் சில பவுண்டரிகளை அடித்திருந்த நிலையில், மீண்டும் அதே ஷாட்டை விளையாட முயன்று தனது விக்கெட்டையும் இழந்தார்.
அதன்படி விக்டோரியா அணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலாண்ட் பந்துவீச்சில் அடுத்தடுத்த பந்துகளில் சாம் கொன்ஸ்டாஸ் பவுண்டரி அடித்து அசத்தினார். இருப்பினும், ஸ்காட் போலண்ட் தனது அடுத்த ஓவரிலேயே அதற்கான பதிலடியையும் கொடுத்தார். அந்த ஓவரில் சாம் கொன்ஸ்டாஸ் லெக் சைட் திசையில் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் பந்தை முழுமையாக தவறவிட்டதுடன், க்ளீன் போல்டாகியும் பெவிலியனுக்கு திரும்பினார்.