
Scott Styris Wants India To Give Enough Opportunities To Shreyas Iyer (Image Source: Google)
இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் தலா ஓர் ஆட்டத்தில் விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் மொத்தமாக மூன்று இன்னிங்ஸிலும் 62 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் 5 ஆட்டங்களில் 94 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கு அடுத்ததாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது. இந்திய ஒருநாள், டி20 அணிகளில் ஷ்ரேயஸ் ஐயர் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஸ்ரேயஸ் ஐயருக்கு இந்திய அணியில் கூடுதல் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்று நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கூறியுள்ளார்.