
SEA vs NY, Match 18 Dream11 Prediction: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் எம்ஐ நியூயார்க் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தி இருந்தது. இதனால் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் சியாட்டில் ஆர்காஸ் அணி இப்போட்டியில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன், தொடர் தோல்விக்கும் முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
SEA vs NY: Match Details
- மோதும் அணிகள்- சியாட்டில் ஆர்காஸ் vs எம்ஐ நியூயார்க்
- இடம் - கிராண்ட் பிரெய்ரி, டல்லாஸ்
- நேரம் - ஜூன் 28, காலை 6.30 மணி (இந்திய நேரப்படி)
SEA vs NY: Live Streaming Details
எம்எல் சிகிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.
SEA vs NY : Head-to-Head in IPL
- Total Matches: 4
- MI New York: 3
- Seattle Orcas: 1
- No Result: 0