Advertisement

உலகக்கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளை கணித்த சேவாக்!

இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கணித்துள்ளார்.  

Advertisement
Sehwag's surprise omission while naming 4 World Cup 2023 semi-finalists!
Sehwag's surprise omission while naming 4 World Cup 2023 semi-finalists! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 28, 2023 • 09:05 PM

இந்தாண்டு ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 19ஆம் தேதி இறுதிப்போட்டியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 28, 2023 • 09:05 PM

இதையடுத்து இந்த தொடரில் அரையிறுதி சுற்றுக்கு செல்ல போகும் அணி எது என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்த உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு ரன்களை குவிப்பார் என நான் நம்புகிறேன். உலகக்கோப்பையை கைப்பற்ற விராட் கோலி பெருமளவு முயற்சி செய்வார்.

Trending

அனைவரும் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்தை தான் எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால் அன்று யார் வெற்றி பெறுவார்கள் என்று என்னால் இப்போது சொல்ல முடியாது. எந்த அணி அழுத்தத்தை சிறப்பாக கையாள்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாக இருப்பார்கள். என்னைப் பொறுத்தவரை பாகிஸ்தானை விட அழுத்தத்தை கையாள்வதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. ஆரம்ப காலத்தில் எல்லாம் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படுவார்கள். 

ஆனால் 2000 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி அழுத்தத்தை கையாள்வதில் கைதேர்ந்து விட்டது. இப்போது யார் வெற்றி பெறுவார்கள் என்று கூறுவது சரியாக இருக்காது. இந்தியா 12 ஆண்டுகளுக்கு பிறகு தங்களது சொந்த மண்ணில் விளையாடுகிறார்கள். இதனால் மைதானங்கள் எப்படி செயல்படும் என்று இந்திய வீரர்களுக்கு நன்றாகவே தெரியும். என்னை கேட்டால் அரை இறுதிக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா , பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெறும்” என்று சேவாக் கூறியுள்ளார். 

சேவாக்கின் இந்த கருத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். நியூசிலாந்து அணியில் வில்லியம்சன் இடம்பெறுவது சந்தேகமாக இருப்பதாகவும் தென் ஆப்பிரிக்க அணியின் பலமும் முன்பு போல் இல்லை என்பதாலும் சேவாக் சொன்ன நான்கு அணிகள் அரையிறுதிக்கு வர அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement