
NZ vs PAK: ஷாஹின் அஃப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிப்பு! (Image Source: Google)
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் முடிவடைந்த நிலையில் இன்னும் 2 டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ளது.
இந்த தொடர் முடிவடைந்தவுடன் பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது. இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் கேப்டன் மற்றும் 17 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் மற்றும் டி20 போட்டி கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆசாம் விலகி நிலையில் புதிய கேப்டனாக ஷாஹின் அஃப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பாகிஸ்தான் அணியில் ஹசீபுல்லா கான், அப்பாஸ் அஃஃப்ரிடி ஆகியோர் டி20 அணிக்கு முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.