பிக் பேஷ் டி20: பவுண்டரிகளை பறக்க விட காத்திருக்கும் ஷஃபாலி!
மகளிர் பிக் பேஷ் தொடரின் அணியான சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு விளையாட இந்தியாவின் ஷஃபாலி வர்மா ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆடவர்களுக்கு நடத்தப்படும் ஐபிஎல், பிக் பேஷ் போன்ற டி20 தொடர்களைத் தொடர்ந்து மகளிருக்கான டி20 தொடரை ஆஸ்திரேலிய மகளிர் பிக் பேஷ் என்ற பெயரில் நடத்தி வருகிறது.
இத்தொடரில் உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுவந்த நிலையில், கடந்தாண்டு இந்தியாவைச் சேர்ந்த ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் பங்கேற்று விளையாடினர்.
இந்நிலையில் தற்போது அந்த வரிசையில் இந்திய அணியின் இளம் அதிரடி வீராங்கனை ஷஃபாலி வர்மாவும் இணைந்துள்ளார்.
அலிஷா ஹீலி தலைமையிலான சிட்னி சிக்சர்ஸ் அணியில் விளையாடுவதற்காக ஷஃபாலி வர்மா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் நடப்பாண்டு மகளிர் பிக் பேஷ் லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக ஷஃபாலி வர்மா-அலிஷா ஹீலி இணை களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now