
19 வயதுக்கு உட்பட்ட முதலாவது மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் ஜனவரி மாதம் நடைபெறுகிறது. இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்திய அணியுடன் யுஏஇ, தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து அணிகளுடன் இந்திய அணி உள்ளது. இந்த உலகக்கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.
லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் என மொத்தம் 12 அணிகள் குரூப் 6 சுற்றுக்கு முன்னேறும். அங்கு 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டும் தங்களுக்குள் மோதும். குரூப் 6 சுற்றின் முடிவில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி ( 19 வயதுக்கு உட்ப்டோர்) தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது.