
இந்தியாவில் வெற்றிகரமாக நடந்து வரும் ஐபிஎல் டி20 லீக்குக்கு முன்னோடி 2003 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தால் நடத்தப்பட்டு வரும் டி20 லீக் டி20 பிளாஸ்ட் தான். இந்தத் தொடரில் மொத்தம் 18 அணிகள் கலந்து கொள்கின்றன. இது இங்கிலாந்தில் நடத்தப்படும் மிகப்பெரிய டி20 லீக் ஆகும். இதன் காரணமாகவே இங்கிலாந்து அடுத்து நடத்துவதை நூறு பந்துகள் போட்டியாக நடத்துகின்றது.
நேற்று வார்விக்ஷையர் அணிக்கு எதிராக நாட்டிங்ஹாம்ஷையர் அணி விளையாடிய போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இரண்டாவதாக பந்து வீசிய நாட்டிங்ஸையர் அணியின் பந்துவீச்சாளர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஷாஹின் ஷா அஃப்ரிடி முதல் ஓவரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆச்சரியப்படுத்தினார்.
எதிரணியின் கேப்டன் அலெக்ஸ் டேவிஸ்க்கு தனது வழக்கமான யார்க்கரை அனுப்பி காலி செய்தார். அடுத்து வந்த கிரீஸ் பெஞ்சமினை கிளீன் போல்ட் செய்தார். இதற்கடுத்த இரண்டு பந்துகள் ஒருரன் போனது. டான் மவுஸ்லி விக்கட்டை ஷார்ட் கவரில் கேட்ச் வைத்து எடுத்தார். கடைசிப் பந்தில் எட் பர்னாட்டுக்கு மீண்டும் ஒரு அற்புதமான யார்க்கரை வீசி காலி செய்தார்.