
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று டுனெடினில் நடைபெற்றது. மழை காரணமாக இந்த போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. .
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணியில்அதிகபட்சமாக கேப்டன் சல்மான் ஆகா 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 46 ரன்களையும், ஷதாப் கான் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 26 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, பென் சீயர்ஸ், ஜேம்ஸ் நீஷம் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 136 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செஃபெர்ட் - ஃபின் ஆலன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் செஃபெர்ட் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 45 ரன்களையும், ஃபின் ஆலான் ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 38 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர்.