NZ vs PAK: டிம் சௌதீ சாதனையை முறியடிப்பாரா ஷாஹீன் அஃப்ரிடி!
நியூசிலாந்து டி20 தொடரில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடவுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி சில சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

நடைபெற்று முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அதேசமயம் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையில், இந்தியாவிடம் தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் எதிர்வரும் மார்ச் 16ஆம் தேதி முதல் தொடங்வுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இருநாட்டு அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன.
Trending
இதையடுத்து எதிர்வரும் மார்ச் 16ஆம் தேதி நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதல் டி20 போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நியூசிலாந்து டி20 தொடரில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடவுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி சில சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
டிம் சௌதீ சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த டி20 தொடரின் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில், நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் டிம் சௌதீயின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். முன்னதாக நியூசிலாந்தின் முன்னாள் வீரர் டிம் சௌதீ பாகிஸ்தானுக்கு எதிராக 23 போட்டிகளில் விளையாடி 38 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்து வருகிறது.
அதேசமயம் ஷாஹீன் அஃப்ரிடி நியூசிலாந்து அணிக்கு எதிராக இதுவரை 21 டி20 போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். மேற்கொண்டு அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் இந்த பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் பாகிஸ்தானின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஹாரிஸ் ராவுஃப் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளராக ஷாஹீன் அஃப்ரிடி உள்ளார். அவர் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 74 போட்டிகளில் விளையாடி அதில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாரிஸ் ராவுஃப் மற்றும் ஷதாப் கான் ஆகியோருக்கு பிறகு பாகிஸ்தான் அணிக்காக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் எனும் பெருமையை ஷாஹீன் அஃப்ரிடி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
பாகிஸ்தான் டி20 அணி: ஹசன் நவாஸ், உமைர் யூசுப், முகமது ஹாரிஸ், அப்துல் சமத், சல்மான் அலி ஆகா (கேப்டன்), இர்ஃபான் நியாசி, குஷ்தில் ஷா, ஷதாப் கான், அப்பாஸ் அஃப்ரிடி, ஜஹந்தத் கான், முகமது அலி, ஷஹீன் ஷா அஃப்ரிடி, ஹாரிஸ் ரவூப், சுஃபியான் முகீம், அப்ரார் அகமது, உஸ்மான் கான்.
Win Big, Make Your Cricket Tales Now