Advertisement

யார் பேச்சையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை - ரிஸ்வானுக்கு ஆதரவாக ஷாஹித் அஃப்ரிடி!

பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வானுக்கு அந்நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான் ஷஹித் அஃப்ரிடி ஒரு முக்கிய அறிவுரையை தந்துள்ளார் .

Bharathi Kannan
By Bharathi Kannan October 08, 2022 • 19:13 PM
Shahid Afridi hits back at Mohammad Rizwan critics: He doesn't have to listen to anyone
Shahid Afridi hits back at Mohammad Rizwan critics: He doesn't have to listen to anyone (Image Source: Google)
Advertisement

டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் படுமோசமாக உள்ளது. கேப்டன் பாபர் அசாம் கூட தொடர்ந்து ரன்கள் சேர்க்கவில்லை. பாகிஸ்தான அணி ஓரளவுக்கு வெற்றி பெறுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் முஹம்மது ரிஸ்வான் தான்.

முஹம்மது ரிஸ்வான் தொடர்ந்து ரன்களை தொடக்க வீரராக குவித்து வருகிறார். ஆனால் அதனை மற்ற வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள். ஆனால் முகமது ரிஸ்வானையே பலரும் விமர்சித்து வருகின்றனர். முஹம்மது ரிஸ்வான் உடைய ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருப்பதாக பலரும் சாடி வருகின்றனர். இது நன்றாக விளையாடும் ஒரே வீரரையும் குறை சொல்லுகிறார்களே என்று மற்ற நாட்டு ரசிகர்கள் இடையே ஏற்படுத்துகிறது. 

Trending


இது குறித்து பேசிய பாகிஸ்தானியின் முன்னாள் ஜாம்பவான் சாஹித் அப்ரிடி, “நீங்கள் பந்து வீச்சோ இல்லை பேட்டிங்கோ நல்ல தொடக்கம் மிகவும் முக்கியம். ரிஸ்வான் மற்றும் பாபர் இரண்டு பேருமே உங்களுக்கு நல்ல தொடக்கத்தை அளிக்கிறார்கள். ஆனால் இரண்டு பேரை வைத்து ஒரு அணியை உருவாக்க முடியாது .11 பேரும் விளையாட வேண்டும். 6 பேட்ஸ்மேன்கள் அணியில் இருக்கிறார்கள். 

அதில் குறைந்த பட்சம் மூன்று வீரர்கள் ஆவது அணிக்கு ரன் சேர்க்க பங்களிப்பை கொடுக்க வேண்டும். ரிஸ்வான் அவருடைய திட்டத்தை மாற்ற எந்த தேவையும் இல்லை. அவர் யார் பேச்சையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.

நடப்பாண்டில் மட்டும் ரிஸ்வான் 14 டி20 போட்டிகளில் 8 அரைசதம் அடித்திருக்கிறார். நேற்று நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கூட ரிஸ்வான் தனி ஆளாக நின்று 78 ரன்கள் அடித்தார். இதனால் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான், பாபர் ஆசாம் தவிர மற்ற வீரர்கள் சொதப்பி வருவது அந்த அணியின் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement