அதிக தன்னம்பிக்கை உங்களுக்கான வீழ்ச்சியை கொண்டு வரும் - ஷாகித் அஃப்ரிடி!
தொடர் வெற்றிகளால் வரும் அதிகப்படியான தன்னம்பிக்கை உங்களுக்கு தோல்வியை கொடுக்கும் என்று இந்திய அணி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த மாதம் 5ஆம்தேதி தொடங்கி 7 வார காலங்களாக நடைபெற்ற இந்த கிரிக்கெட் திருவிழா ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்த தொடரில் வலுவான அணிகளை தோற்கடித்த இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்தது. மேலும் தற்போதைய அணியில் அனைத்து வீரர்களுமே உச்சகட்ட பார்மில் இருந்ததால் கண்டிப்பாக இம்முறை கோப்பையை வெல்வோம் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பினர். ஆனாலும் வழக்கம்போல முக்கியமான ஆட்டத்தில் சொதப்பிய இந்தியா தோல்வியை சந்தித்தது.
Trending
இந்நிலையில் தொடர் வெற்றிகளால் வரும் அதிகப்படியான தன்னம்பிக்கை உங்களுக்கு தோல்வியை கொடுக்கும் என்று இந்திய அணி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொலைக்காட்சியில் பேசிய அவர் "தொடர்ச்சியாக வெற்றி மேல் வெற்றிகளை பெற்று வந்தால் நீங்கள் அதிக தன்னம்பிக்கையை பெற்று விடுவீர்கள் (ஓவர் கான்ஃபிடன்ஸ்). அதுதான் உங்களுக்கான வீழ்ச்சியை கொண்டு வரும்" என்று கூறினார்.
Win Big, Make Your Cricket Tales Now