
வங்கதேச லெவன் அணி தமிழகத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தமிழக அணி வென்ற நிலையில், இன்று இரண்டாவது ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச லெவன் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பாபா இந்தரஜித் தலைமையிலான தமிழக அணி களமிறங்கியது.
தொடக்க வீரராக களமிறங்கிய சூர்யபிரகாஷ் 42 ரன்களில் ஆட்டமிழக்க, நாராயண் ஜெகதீசன் 18 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து பொறுப்பான ஆட்டத்தை விளையாடிய சாய் சுதர்சன் 40 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். கேப்டன் பாபா அப்ரஜித்தும் 20 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். டாப் வரிசையில் 3 வீரர்கள் ரன் அவுட்டாக தமிழக அணி தடுமாறியது.
128 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்த நிலையில், அதிரடி வீரர் ஷாரூக்கான் வங்கதேச பந்துவீச்சை சிதறடித்தார். 7 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் விளாசிய ஷாரூக்கான், 47 ஓவர் முடிவில் 69 பந்துகளில் 100 ரன்களை விளாசினார். சஞ்சய் யாதவ் தன் பங்கிற்கு 39 ரன்கள் எடுக்க, தமிழக அணி 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்தது.