Advertisement

'இந்த வீரர் பொல்லார்டை நினைவு படுத்துகிறார்' - வியக்கும் அனில் கும்ப்ளே

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர்  வருகிற 09ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்க

Bharathi Kannan
By Bharathi Kannan April 05, 2021 • 16:51 PM
Cricket Image for 'இந்த வீரர் பொல்லார்டை நினைவு படுத்துகிறார்' - வியக்கும் அனில் கும்ப்ளே
Cricket Image for 'இந்த வீரர் பொல்லார்டை நினைவு படுத்துகிறார்' - வியக்கும் அனில் கும்ப்ளே (Image Source: Google )
Advertisement

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர்  வருகிற 09ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணை, மைதானங்களை பிசிசிஐ ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், ஐபிஎல் அணிகள் தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

அதன் ஒரு பகுதியாக கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. அந்த அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான ஷாருக் கானும் பங்குவகிப்பதால், பஞ்சாப் கிங்ஸ் அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Trending


இந்நிலையில் ஷாருக் கான் விளையாடுவதை பார்த்தல் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரேன் பொல்லார்ட் தான் நினைவுக்கு வருகிறார் என்று அந்த  அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய கும்ப்ளே, “ஷாருக் விளையாடுவதை பார்த்தால் எனக்கு பொல்லார்டின் நியாபகம் தான் நினைவுக்கு வருகிறது. ஏனெனில் நாங்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய பொழுது வலைபயிற்சியில் பொல்லார்ட் அதிரடியாக விளையாடுவார். அதேபோல் ஷாருக் கான் அதிரடியான ஆட்டத்தை பயிற்சியின் போதே வெளிப்படுத்துவது வியப்பாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

சயீத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழ்நாடு அணிக்காக விளையாடிவந்த ஷாருக் கான், நடப்பாண்டு ஐபிஎல் ஏழத்தின் போது  யாரும் எதிர்பார்காத வகையில் பஞ்சாப் கிங்ஸ்  அணி 5.25 கோடிக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement