
வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நிலையில், இத்தொடருக்கான அணியை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2023-25ஆம் ஆண்டு சுழற்ச்சிகான இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முன்னேறியுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்த இறுதிப்போட்டி இன்று (ஜூன் 11) லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரை முடித்த கையோடு ஆஸ்திரேலிய அணியானது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரானது ஜூன் 25ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் நிலையில், இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ரோஸ்டன் சேஸும், துணைக்கேப்டனாக ஜோமன் வாரிக்கனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.