
களத்தில் நடுவருடன் மோதுவதை ஒரு பொழுது போக்கு பழக்கமாக செய்து வருகிறார் ஷகிப் அல் ஹசன். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட வங்கதேச கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் பிபிஎல் குறித்து குற்றஞ்சாட்டினார். தம்மை பிபிஎல் தொடரின் தலைவராக நியமித்தால், அனைத்தையும் ஒரே நாளில் மாற்றி விடுவேன் என்றும் கூறி இருந்தார்.
இந்த நிலையில், டாக்காவில் நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் பாரிஷல் அணிக்காக களமிறங்கிய ஷகிப் அல் ஹசன், சில்ஹெட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியுடன் பலப்பரிட்சை நடத்தினார். இதில் முதலில் பேட் செய்த பாரிஷல் அணி 20 ஓவர் முடிவில் 194 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இதில் ஷகிப் அல் ஹசன் 32 பந்துகளில் 67 ரன்கள் விளாசினார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சில்ஹெட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 19 ஓவர் முடிவிலேயே வெற்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஷகிபுல் ஹசன் பேட்டிங் செய்யும் போதே இதே சர்ச்சை ஏற்பட்டது. ஆட்டத்தின் 15.4 வது ஓவரில் ரிஜூர் வீசிய பந்து ஷகிபுல் ஹசன் தலைக்கு மேல் சென்றது. இதற்கு நியாயப்படி ஓயிடு வழங்கி இருக்க வேண்டும்.