
Shakib Al Hasan, Mustafizur Rahman Unlikely To Get NOC To Play Remainder Of IPL 2021 (Image Source: Google)
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் காலவரையின்று ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 29ஆம் தேதி நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தின் முடிவில் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் -அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று அறிவித்தது.
ஆனால் தற்போது அதிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன. ஏனெனில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் சில வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்கள் நிலவி வருகின்றன.
அதில் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்பது பெரும் சிக்கலாக அமைந்துள்ளது. இதில் தற்போது வங்கதேச அணி வீரர்கள் ஷாகிப் அல் ஹசன், முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் பங்கேற்பதும் சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.