
வங்கதேச அணியை சேர்ந்த 34 வயது முன்னணி வீரரான ஷாகிப் அல் ஹசன் 2006 ஆம் ஆண்டு வங்கதேச கிரிக்கெட் அறிமுகமாகி தற்போது வரை அந்த அணியின் நட்சத்திர வீரராக விளையாடி வருகிறார். இதுவரை வங்கதேச அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 58 டெஸ்ட் போட்டிகள், 215 ஒருநாள் போட்டிகள் மற்றும் 84 டி20 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டின் ஆல்டைம் பெஸ்ட் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் தொடக்க வீரர்களாக இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வரை தேர்வு செய்துள்ளார். அதேபோன்று மூன்றாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்லையும், நான்காவது இடத்தில் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் தேர்வு செய்துள்ளார்.
மேலும் 5 ஆவது வீரராக உலகின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் என்று பார்க்கப்படும் ஜேக் காலிஸ்ஸை தேர்வு செய்துள்ளார். ஆறாவது வீரராக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியை தேர்வு செய்த அவர், இந்த ஆல்டைம் சிறந்த ஒருநாள் அணியின் கேப்டனாக அவரை தேர்வு செய்துள்ளார்.