
Shakib, Stafanie Taylor Voted ICC Players Of The Month (Image Source: Google)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் மாதந்தோறும் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனை தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த ஐசிசி விருது பட்டியலில் இடம் பெறும் 3 வீரர், வீராங்கனைகளில் இருந்து தலா ஒருவர் வாக்குகளின் அடிப்படையில் தேர்வு செய்து விருது வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரராக வங்கதேச அணியின் ஷகிப் அல் ஹசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.