முகமது ஷமிக்கு கரோனா உறுதி; ஆஸி தொடரிலிருந்து நீக்கம்!
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
வரும் அக்டோபர் இறுதியில் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணி அதற்குமுன் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிராக டி20 தொடர்களில் பங்கேற்று விளையாட உள்ளது.
இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்கி 23, 25 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது. 20ஆம் தேதி நடைபெறும் போட்டி மொஹாலியிலும், அடுத்த இரண்டு போட்டிகளும் நாக்பூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் நடக்கவுள்ளது.
Trending
இத்தொடரில் பங்கேற்கவுள்ள வீரர்கள் அனைவரும் நேற்று இரவு மொஹாலிக்கு சென்றடைந்தனர். அப்போது அங்கு அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது. அதில் முகமது ஷமிக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட உடன் அவர் தனிமைப்படுப்பட்டார். இவருடன் மற்ற வீரர்கள் தொடர்பில் இல்லையென்பதால், மற்ற வீரர்களுக்கு தொற்று பரவியிருக்காது என்பது உறுதியாகியுள்ளது.
ஷமி ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க தொடர்களில் தனது திறமையை நிரூபிக்கும் பட்சத்தில் அக்ஸர் படேலுக்கு மாற்றாக அணியில் சேர்க்கப்படுவார் என சில தினங்களுக்கு முன் பிசிசிஐ நிர்வாகி கூறியிருந்த நிலையில் தற்போது ஷமி நீக்கப்பட்டுள்ளார். இதனால், ஷமி டி20 உலகக் கோப்பையில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்ட வாய்ப்புள்ளது.
தற்போது 32 வயதாகும் இவர் கடந்த ஜூலைக்கு பிறகு ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை. அதேபோல், டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து விளையாடவில்லை. ஐபிஎல் 15ஆவது சீசனில் 16 போட்டிகளில் 20 விக்கெட்களை வீழ்த்தியவர் என்பதாலும், அனுபவ பந்துவீச்சாளர் என்பதாலும்தான் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, ஆஸி தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now